இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கெற் ஒன்றில் சனிக்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக பிளாஸ்ரிக் கப்பில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். நிகழ்வின் போது அவற்றை பரிமாற்றியுள்ளனர். இதன்போது அதனை திறந்து குடிந்த சிலர் குளிர்பானத்தின் அடிப்பகுதியில் கழிவுகள் இருந்ததைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, அதனைப் பெற்றவர்கள்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தெரியப்படுத்தியிருந்தனர். அவர்கள் வவுனியா நகரசபைச் செயலாளார் இ.தயாபரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, உடனடியாகவே குறித்த சுப்பர் மார்கெற்றுக்கு சென்ற வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பெட்டி ஒன்றில் பொதிசெய்யப்பட்டிருந்த கப்பில் அடைக்கப்பட்ட குளிப்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.
இன்று குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த வர்த்த நிலையம் முன்னர் ஒரு தடவை சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.