திருமணம் முடித்து 6 நாளில் கணவர் விபத்தில் பலி - மனைவி படுகாயம்!

யாழ் அராலியில் இடம்பெற்ற விபத்தில் திருமணம் முடித்து புதுமாப்பிள்ளையாக வெளியே சென்ற கணவனும் மனைவியும் விபத்துக்குள்ளானதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும், அராலியூர் பகுதியில் இருந்து வந்த மோட்டார் வண்டியும் மோதியததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
டிபர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதாக
 
இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த  தவனேஸ்வரன் பிரபாகரன் (வயது 29) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இதேவேளை படுகாயமடைந்த அவரது மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவர்கள் இருவரும் திருமணம் முடித்து 6 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.