அறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா

பர்மிய இராணுவத்தால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் வேலையில் தற்போது நெஞ்சை உலுக்கும் செய்திகள் அங்கிருந்து வெளியாகி வருகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் கத்தியால் குத்தப்பட்டும் அறுக்கப்படும் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


ஒரு எட்டு மாத குழந்தை, ஐந்து வயது மற்றும் ஆறு வயது சிறுவர்கள் அவர்களின் வீட்டில் வைத்தே பர்மிய இராணுவத்தால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் இருந்து தீவிரவாதிகளை அப்புறப்படுத்துவது என்கிற பெயரில் நடைபெற்றுள்ளது. இதே போன்று கடந்த அக்டோபார் 9 ஆம் தேதி முதல் நூற்றுக் கணக்கானோரை அவர்கள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் இந்த தகவல் அனைத்தும் பர்மிய இராணுவத்தின் பிடியில் இருந்து தப்பி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்த சுமார் 200 ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் இருந்து பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த கொடூரங்களில் சில, ஐந்து வயது சிறுமி தன்னை ஒரு பர்மிய ராணுவ வீரன் கற்பழிக்க முயல்வதிலிருந்து தற்காத்துக்கொண்டதால் அவள் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டதும் எட்டு மாத கைக்குழந்தையுடைய ஒரு தாயை ஐந்து இராணுவ வீரர்கள் கூட்டு பலாத்காரம் செய்யும் போது கொன்றதும் என்று நம் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது
தன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை நேரில் கண்ட 14 வயது சிறுமி, தனது தாய் பர்மிய இராணுவத்தினரால் கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டதையும் 8 மற்றும் 10 வயது நிரம்பிய தனது சகோதரிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் விவரித்துள்ளார்.

இந்த கொடூரங்கள் அனைத்தையும் நிகழ்த்தும் பர்மிய அரசை தலைமை தாங்கும் “அமைதிக்கான நோபல் பரிசு (?) பெற்ற ஆங் சான் சூகி அரசு இதனை எப்போதும் போல் மறுத்து வருகிறது. இன்னும் காவல்துறையினர்தங்களின் நடவடிக்கைகளின் போது சில நேரம் மக்களை தாக்கியிருக்கலாம் என்றும் இது உலக நாடுகளில் சகஜமாக நடப்பது தான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

பர்மாவின், ராகைன் பகுதியில் இராணுவத்தினர் முதலில் அப்பகுதி ஆண்களை எல்லாம் சுற்றி வளைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி சென்ற பின் அப்பகுதிகளில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் தங்கள் தாய் தாக்கப்படுவதை பார்த்து அழும் குழந்தைகளை கொலை செய்தும் வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
ஒரு சம்பவத்தில் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அந்த வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியதாகவும் தகவல்கள் கிடைதுள்ளன.

இத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிய பலர், தாங்கள் தாக்கப்படும் போதும், கர்பழிக்கப்படும் போதும் “நீங்கள் பங்களாதேஷிகள், அங்கு செல்லுங்கள்” என்றும் “உங்களுக்காக அல்லாஹ் என்ன செய்து விடுவான்” என்றும் இராணுவத்தினர் கூறியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினரின் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உடனான நேர்காணலில் பெரும்பான்மையானர், தாங்கள் பிறர் கொலை செய்யப்படுவதை நேரில் கண்டதாகவும் தங்களது குடும்பத்தினரை இந்த வன்முறைக்கு பலி கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். பலர் தங்களது குடும்பத்தினர் காணவில்லை என்றும் அவர்கள் எங்கு எவ்வாறு உள்ளனர் என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களை பேட்டி கண்ட ஐநா ஊழியர்களில் ஒருவரான லின்னியா அர்விட்சன், தான் இது வரை இப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை எதிர்கொண்டதே இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது போன்ற அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை என் வாழ்நாளில் நான் எதிர்கொண்டதில்லை. நீங்கள் பேட்டி காணும் 204 நபர்களிடமும் நெஞ்சை அதிர வைக்கும் நிகழ்வுகள் பற்றிய செய்தி உள்ளது, அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டோ, உறவினர்கள் கொல்லப்பட்டோ, கற்பழிக்கப்பட்டோ காணாமல் போயோ உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தங்களுக்கு ஏற்பட்ட நிலையின் காரணமாக அவர்களின் பெண்களூம் ஆண்களும் துக்கம் தாளாமல் அழுது விடுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 88,000 மக்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 204 பேர்களில் அனைவரிடமும் இப்படியான சோகங்கள் உள்ளது என்றால் இந்த வன்முறையின் அளவை எண்ணிப்பார்க்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ராகைன் பகுதியில் வாழும் ரோஹின்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியில் தொடங்கியது. இது அப்பகுதியில் உள்ள எல்லையில் பணியாற்றிய நான்கு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்விட்சன், இது வெறும் போராளிகளை தேடும் போது ஏற்படும் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது. இது நன்கு திட்டமிட்டு நடத்தப்படும் இராணுவ நடவடிக்கை என்று கூரியுள்ளார்.

குழந்தைகளை கொல்வதும் பெண்களை கற்பழிப்பதும் அப்பகுதியில் ஊடுருவிய போராளிகளை தேடும் நடவடிக்கை என்று கூறுவது அறிவற்ற செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக எவரும் எட்டுமாத குழந்தையை கொலை செய்ய மாட்டார்கள் என்று கூறிய அவர் இது ஏன் நடந்தது என்றால் அவர்கள் அந்த குழந்தையை மனிதர்களாகவே கருதவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வன்முறைகளுக்கு இரண்டு நோக்கம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒன்று காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்த மக்களின் மீது கூட்டு தண்டனையாக அவர்களை துன்புறுத்தி அசிங்கப்படுத்துவது, மற்றொன்று சிறுபான்மை எதிர்ப்பு மற்றும் இனவாத அழிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கழக ஆணையர் செய்த் ரா’அத் அல் ஹுசைன், ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் சகித்துக்கொள்ள முடியாதவை என்றும் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யும் நிகழ்வுகளுக்கு சர்வதேச சமுதாயம் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ரோகிங்கியா சிறுவர்களுக்கு நிகழ்த்தப்படும் ஏற்க்கமுடியாத கொடுமைகள் மனமுடையச் செய்கின்றன என்றும் எது மாதிரியான மனிதன் தன் தாயின் பாலுக்கு அழும் ஒரு குழந்தையை குத்திக் கொலை செய்வான்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும், “தங்களை காப்பாற்ற வேண்டிய பாதுகாப்பு படையினரே தன்னை கற்பழிக்கும் போது தனது குழந்தையையும் கொலை செய்வது என்பது எந்தமாதிரியான நடவடிக்கை? இது எத்தகைய தேசிய இலக்கை நிலைநாட்டுகிறது?” என்று கேள்வி எழுப்பிய அவர் சர்வதேச சமுதாயம் தங்களின் அனைத்து சக்தியை கொண்டு மியாமாரின் நடத்தப்படும் இத்தகைய வன்முறைகளை நிறுத்த முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.