இதனால் ஜனாதிபதியான பின்பும் ட்ரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் அமெரிக்காவிற்கு யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதற்கு காரணம் டிரம்ப் மீது எழுந்துள்ள அதிரடி குற்றச்சாட்டுக்கள். அண்மையில் கூட 500,000 மேலானோர் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மீது எழுப்பினர். இது டிரம்பிற்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை ட்ரம்ப் குறைவாகவே பெற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களில் 53 சதவீதம் பேர் பராக் ஒபாமாவே மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ட்ரம்ப் 43 சதவீதமும் தெரிவித்துள்ளனர். மேலும் 35 சதவீதம் பேர் கடந்த வாரம் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அது தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த கருத்துக் கணிப்பு விவகாரம் ட்ரம்புக்கு தெரிந்திருந்தால் பெரிதும் அதிர்ச்சிகுள்ளாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த இஸ்லாமியர்கள் தடை விவகாரத்தில் வெறும் 26 சதவீதமானோர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 48 சதவீதத்திற்கு மேலானோர் ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ட்ரம்பிற்கு எதிரான போராட்டங்களுக்கெல்லாம் மூல காரணம் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளரும் செல்வந்தருமான ஜார்ஜ் சாரஸ் என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.