இந்தோனிசியாவில் Sharia law பின்பற்றப்பட்டு வருகிறது. ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால் விபச்சாரம் தொடர்பான விடயங்களுக்கு அதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் காதலனுடன் சேர்ந்து உறவு வைத்துக் கொண்ட காதலிக்கு பொது மக்கள் முன்னிலையில் 26 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தோனிசியாவின் Banda Aceh பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் அவருடைய காதலரும் திருமணத்திற்கு முன்னர் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகாத இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லக் கூட செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இப்பெண் இஸ்லாமிய விதிகளை மீறியதால், பலர் முன்னிலையில் அவருக்கு 26 சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதே போன்று தான் இவருடைய காதலருக்கும் இதே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.