அலி என்ற இந்த இளைஞர் தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கர்நாடக அரசுப் பேருந்து ஒன்று அலியை மோதித் தள்ளியதுடன் அவர் மேலேயே ஏறிச் சென்றுவிட்டது. இதனால், கடும் இரத்த இழப்புக்கு ஆளான அலி, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி தனக்கு உதவுமாறு கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால், அவரைச் சுற்றி நின்றவர்கள் அவரைப் படம் பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் முயற்சித்தனரே அன்றி, அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை. ஒரேயொருவர் மட்டும் அலியின் வாயில் சிறிது தண்ணீரை ஊற்றினார்.
கடைசியாக சுமார் அரை மணிநேரத்தின் பின் அலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் சிகிச்சை பலன் தராத நிலையில் அலி உயிரிழந்தார்.
திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தினால் அவ்வழியே சென்றவர்கள் திகைத்துப் போனதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு எவ்வாறு உதவுவது என்று தெரியாமலும் சிலர் தயங்கியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.