வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் சமீர கலிகு ஆராச்சியின் தீவிர முயற்சியின் பயனாக இது சாத்தியமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக உணவு உண்ண முடியாமல் மனம்பிட்டிய, நெழும்வில பகுதியில் காட்டு யானை ஒன்று அவதிப்பட்டது.
35 வயதுடைய இந்த யானை பொலித்தீனை உணவாக உட்கொண்டமையால், அது வாயில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்தும் உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதியில் இருந்து இந்த யானை சேற்று நீரில் விழுந்து கிடக்கிறது.
மோசமான உடல் நிலையை அடைந்துள்ள இந்த யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதோடு சிக்கியிருந்த பாரிய அளவிலான பொலித்தீன்களை நீக்குவதற்கு கடுமமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
தமன்கடுவ பிரதேச சபையினால் நெழும் மாவத்தை பகுதியில் கொட்டும் பொலித்தீன் கழிவுகளை உணவாக எடுத்துக் கொண்டமையினால் 5 வருடங்களுக்குள் 8 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவர் உட்பட வனவலிங்கு அதிகாரிகள் இந்த யானையின் உயிரை காப்பாற்றுவதற்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.