கர்நாடகாவில் பிரபலமான உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் பெரிய பேருந்துகள், கார்களில் சென்று பார்ப்பது வழக்கம்.
விலங்குகளை பார்ப்பதற்காக பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இன்னோவா வாகனத்தில் சுற்றுலா வாசிகள் சென்றபோது, அந்த வாகனத்தை இரண்டு சிங்கங்கள் வழிமறித்து தாக்கியுள்ளன.
அந்த வீடியோவில், ஒரு சிங்கம் வாகனத்தின் முன்பு நிற்க, மற்றொரு சிங்கம் வாகனத்தின் மீது ஏற முயற்சித்து, இன்னோவா காரின் பின் கண்ணாடியை உடைக்க முயன்றது. இந்த வீடியோ பதிவு கர்நாடக ஊடகங்களில் ஒளிப்பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அசம்பாவித சம்பவத்திற்கு வாகன ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்தத்துடன் அந்த ஓட்டுனரை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.