கலிபோர்னியாவில் உள்ள ஹொட்டல் அறையில் விமானப் பணிப்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Vanessa Yeap என்பவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்தார்.
அவர் சிங்கப்பூரில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் விமானத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த Yeap தன்னுடைய ஹொட்டல் அறையில் ஓய்வு எடுத்தார்.
ஆனால் அதன் பின்னர் அவர் ஹொட்டல் அறையை விட்டு வரவே இல்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரைத் தேடி ஹொட்டல் அறைக்கு சென்றனர்.
அப்போது அவர் ஹொட்டல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு முதலுதவிகள் அளித்த நிலையிலும் அவர் கண்விழிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது.
Yeap விமானத்தில் ஏறிய போதே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சக விமான ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் 15 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
Yeap இறந்தது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.