உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இங்கு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான்.
ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதி உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர் இருக்கும். இந்த பகுதியில் யூன், யூலை போன்ற மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
ஆனால் அப்போதும் மைனஸ் டிகிரியில் தான் இருக்கும் காலநிலை. இந்த பகுதியின் கோடை காலங்களில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி அளவில் இருக்கும்.
இந்த ஒய்மயகோன் பகுதியில் டிசம்பர் மாதம் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான். கோடை காலங்களில் 21 மணி நேரமாக உள்ளது.
இந்த பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குளிர் காரணாமாக விவசாயம் எதுவும் நடைபெறுவதில்லை. ஆகையால் இவர்களது உணவு மான், குதிரை போன்ற இறைச்சி வகைகள்தான்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்ட பொருட்களை விற்பதுக்கு என்றே அந்த பகுதியில் ஒரே ஒரு கடை செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதி மக்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவது தான்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.