எண்ணூர் எண்ணெய் கசிவு- இளைஞர் படை மீண்டும் கடலை நோக்கி!

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு கப்பல்களும் சேதமடைந்தன. 


சரக்கு கப்பலில் இருந்த டீசல் வெளியேறி, கடலில் கலந்தது. கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் இணைந்து எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் #ChennaiOilSpill என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதன் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sarah Jacob ‏@JacobSarah24

#ChennaiOilSpill பிரச்சினைக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது கடல் சார் வாழ்க்கையை நேரடியாகவும், மீனவர்களை மறைமுகமாகவும் பாதிக்கிறது.

Sarfaraz Khan ‏@Itsme_sarfaraz

கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை எடுக்க வாளியைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் அறிவை எண்ணி வியக்கேன்.

sakthi ‏@sakthi1964

#ChennaiOilSpill குறித்து முயற்சிகள் போர்க்கால வேகத்தில் எடுக்கப்பட வேண்டும், சுற்றுப்புறச் சூழல் காக்கப்பட வேண்டும். தேவையான கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

Ankit Singh ‏@ankitking

2010-ல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஏராளமான எண்ணெய் கொட்டியபோது, ஒபாமா கண்டனம் தெரிவித்து, அபராதம் விதித்தார். ஆனால் இங்கு?

Dr. Mugdha Singh ‏@IMMugdhaSingh

#ChennaiOilSpill-ன் விளைவு வருடக்கணக்கில் நீடிக்கும். இதைப் போக்க வழிகளைக் கண்டறிய வேண்டும்.

suman seran ‏@SumanSeran

தகுந்த நடவடிக்கை எடுக்க நிபுணர்களின் ஆலோசனை தேவை.

ArunVino

இளைஞர் படை மீண்டும் கடலை நோக்கி! #ChennaiOilSpill

புலி @PuliArason

கொஞ்சம் கூடங்குளத்தின் நிலையை யோசியுங்கள்.

Vinod kumar ‏@vks223

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என் வேண்டுதல்கள்.

புலி @PuliArason

#ChennaiOilSpill மீனவர்களுக்கு ஏற்பட்ட மற்றுமொரு சோதனை.

jomotseringma

லட்சக்கணக்கில் கடலில் வாழும் உயிரினங்களுக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையா?

Shruti Parasuram ‏@TallGirlStories

மரங்களை வளர்ப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். இப்போது எண்ணெயை எடுப்பது குறித்து யோசிக்கிறோம். #Chennai #jinxed #ChennaiOILSpill #scary

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.