விக்கிபீடியாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசகலாவுக்கு தனி பக்கம் ஆரம்பிக்கப்பட்டு அவரை பற்றி மோசமான கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பபட்டுள்ளது.
விக்கிபீடியா என்பது பொதுவாக ஒரு விடயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக இயங்கும் வலைத்தளம் ஆகும்.
இதில் யார் வேண்டுமானாலும் பக்கத்தை தொடங்க முடியும். மேலும் இதை யார் நினைத்தாலும் எடிட் செய்யக்கூட முடியும்.
ஒரு சமயம் கூகுள் சி.இ.ஓ வாக சுந்தர் பிச்சை பதவியேற்ற போது மட்டும், அவரது பள்ளி தொடர்பான விவரங்களுக்காக சுமார் 20 முறை எடிட் செய்யப்பட்டது.
தற்போது யாரோ விஷமிகள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் பெயரில் ஒரு பக்கம் தொடங்கியுள்ளனர்.
மேலும், அதில் சசிகலா சனியன், ஜெயலலிதாவை கொன்ற ஆயா சசிகலா போன்ற இழிவான விடயங்களால் அது எடிட் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அது மாற்றப்பட்டு நேற்று மட்டும் 50க்கும் மேற்ப்பட்ட முறைகளுக்கு மேல் சசிகலா விக்கிபீடியா பக்கம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா தொடர்பான விக்கிபீடியா ஸ்கீரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.