சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா: அதிரடியாய் களமிறங்கும் நோக்கியா !

பார்சிலோனாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் நோக்கியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவை தொடர்ந்து ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விழா இம்மாதம் துவங்குகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 2, 2017 வரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களும், அணியக் கூடிய சாதனங்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஒவ்வொரு ஆண்டும் போல் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இதே விழாவில் நோக்கியாவும் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பார்சிலோனாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான அறிவிப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சீனாவில் மட்டும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. 

இந்நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா போன்கள் உலகின் மற்ற சந்தைகளிலும் வெளியிடப்பட இருப்பதையொட்டு அவற்றிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

இதே விழாவில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனினை பிரத்தியேக அறிமுக விழா மூலம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஸ்மார்ட்போனுடன் டேப்லெட் சாதனம் ஒன்றையும் சாம்சங் வெளியிடும் என கூறப்படுகின்றது. 

இதே போல் எல்ஜி, எச்டிசி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஆவலோடு தயாராகி வருகின்றன. இவ்விழாவில் உலக தொழில்நுட்ப சந்தையின் முன்னணி தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.  

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.