பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த இலங்கை வீரரின் நிலை !

கொழும்பு காலிமுகத்திடலில் இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற போது, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.


அத்துடன், பரசூட் வீரர்களின் சாகச நிகழ்வும் நடைபெற்றது.

இதன்போது, சுமார் 10,000 அடி உயரத்திலிருந்தும் பரசூட் வீரர்கள் விமானத்திலிருந்து கீழே குதித்தனர்.

இவ்வாறு குதித்த வீரர்கள், சரியான இடத்தில் தரையிறங்கினர்.

ஆனால் ஒரு வீரர் மாத்திரம் குறித்த இடத்தில் தரையிறங்காமல் பிரிதொரு இடத்தில் இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக தரையிறங்கிய வீரர் ஒருவரே இவ்வாறு கொழும்பு துறைமுகம் உள்ள பகுதியில் தரையிறங்கியுள்ளார்.

அவரை மீட்க, படகுகளும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 7 ஆயிரத்து 782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.