டிரம்பின் கொடூர செயல்... அமெரிக்காவில் 20 ஆண்டுகள் குடியிருந்தவர்: விமான நிலையத்தால் உயிரைவிட்ட பரிதாபம்?

டிரம்ப் எடுத்த சர்வாதிகார முடிவால் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்ற போது தன் தாய் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் கூறியது தற்போது பொய் என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாடுகளில் உள்ள குடிமக்கள் அமெரிக்க வருவதற்கு தடை செய்யப்பட்டனர்.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடும் கண்டனம் எழுந்தது. அதன் பின்னர் அதற்கான விளக்கத்தை கொடுத்தார். இந்நிலையில் இராக்கைச் சேர்ந்த Mike Hager என்பவர் தன்னுடைய தாய் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா வருவதற்கு தயாராக இருந்தனர்.
ஆனால் டிரம்பின் இந்த அதிரடி உத்தரவால், தன் தாய் விமான நிலையத்தல் தடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் உரிய சிகிச்சை அளிக்க முடியாததால், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
மேலு தான் அமெரிக்காவில் 20 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக இஸ்லாமிய தலைவர் ஒருவர் Mike Hager கூறியது தவறு என்றும் அவரது தாயார் டிரம்ப் தடை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே இறந்துவிட்டதாக அம்பலப்படுத்தியுள்ளார்.
அவர் கடந்த 22 ஆம் திகதி சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று Mike Hager கூறியது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.