யுனிவர்சம் குளோபல் என்ற நிறுவனம் உலகில் உள்ள சுமார் 52 நாடுகளில் ஆண்களை விட குறைந்த சமபளத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது.
இதில் உலகிலே பல்கேரிய நாட்டு பெண்கள் தான் இயல்பாகவே ஆண்களை விட குறைந்த சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்களுக்கு ஒரு டொலர் என்றால் பெண்கள் வெறும் 0.71 டொலர் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். பல்கேரியாவில் சுமாராக 65 சதவீதம் பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
பல்கேரியா நாடைத் தொடர்ந்து சவுதி அரேபிய நாட்டுப் பெண்கள் ஆண்களை விட குறைந்த சம்பளத்தையே எதிர்பார்க்கின்றனர் என்றும் சவுதியில் 21 சதவீதம் பெண்கள் வேலை பார்க்கின்றனர் என்று கூறப்படுகிறது.
மொராக்கோ நாட்டு பெண்கள் தான் உலகிலேயே ஆண்களை விட அதிக சம்பளம் வாங்க விரும்புகிறார்கள். மொராக்கோவில் சுமாராக 27 சதவீதம் பெண்கள் தான் வேலை பார்க்கிறார்கள்.
அமெரிக்க நாட்டு பெண்கள் ஆண்களை விட சுமாராக 9 சதவீதம் குறைந்த சம்பளத்தையே எதிர்பார்க்கின்றார்கள் என்று கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.