தாய்லாந்து நாட்டில் அரசு குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பி வந்த வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் அரசு குடும்பத்தினருக்கு எதிராக கருத்து கூறவும், அவமரியாதையை ஏற்படுத்தும் தகவல்களை பரப்பவும் கடும் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.
கட்டுப்பாட்டை மீறி செயல்படும் நபர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த Burin Intin(28) என்ற நபர் அரசு குடும்பத்தை பற்றி பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இப்புகார்களை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வாலிபர் மீதான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து வாலிபருக்கு அதிகபட்சமாக 22 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதி சிபாரிசு செய்துள்ளார்.
ஆனால், குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாலிபர் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியதை தொடர்ந்து அவரது தண்டனைக் காலம் 11 ஆண்டுகள் 4 மாதங்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் அரசு குடும்பத்தினருக்கு எதிராக கருத்துக்களை பரப்புவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.