பிரித்தானியாவில் எந்தவொரு பிரச்சனையால் யார் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க காவல்துறையை சுதந்திரமாக அணுக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
முதலில் பொலிசார் பாதிப்படைந்தவர்களுக்கு Crime Reference Number என்னும் ஒரு நம்பரை கொடுத்து விடுவார்கள்.
அவர்கள் பொலிசாரை வழக்கு சம்மந்தமாக ஒவ்வொரு முறை அணுகும் போதும் அந்த நம்பரை கூற வேண்டியது அவசியமாகும்.
பொலிசார் வழக்கு விசாரணை நடத்தும் போது, குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது வழக்கு சம்மந்தமான தகவல்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கூறி வருவார்கள்.
அதே போல வழக்கில் தவறு செய்தவர்கள் கைதானாலோ, வெளியில் விடப்பட்டாலோ, பெயில் வழங்கப்பட்டாலோ, அபராதம் விதிக்கப்பட்டாலோ அது 5 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிசாரால் தெரிவிக்கப்படும்.
பொலிசார் விசாரணையை முடித்த பின்னர் Crown Prosecution Service (CPS) என்னும் அமைப்பிடம் விசாரணையில் கிடைத்த மொத்த தகவல்களையும் சமர்பிப்பார்கள்.
அவர்கள் ஆதாரம் போதுமானதாக உள்ளதா, நீதிமன்றத்தில் வழக்கை கொண்டு செல்லலாமா என முடிவெடுப்பார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை மீடியாவிடம் தரும் முன்னர் பொலிசார் அவர்களிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
கற்பழிப்பு போன்ற விடயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியில் ஒரு போதும் சொல்லக்கூடாது.
எனவே, ஏதேனும் பிரச்சனைகளில் நீங்கள் பாதிப்படைந்தால் உங்களுக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் பொலிசாரிடம் தைரியமாக அணுகி, உங்கள் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளுங்கள்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.