iPhone 6S களை திரும்பப்பெறும் கத்தார் - நீங்களும் போனிற்கு போன் மாற்றிக்கொள்ளலாம் !

கத்தார் வர்த்தக மற்றும் வணிக துறை அமைச்சு (Ministry of Economy & Commerce - MEC) Bin Ali Technology Solutions , உடன் இணைந்து, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட iPhone 6S கைப்பேசிகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.



கடந்த 2015ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட  iPhone 6S கைப்பேசிகளில்
UN-EXPECTED SHUTDOWN (தானாக போன் ஆப் ஆகுதல்) பிரச்சினையால் அதிகம் முறைப்பாடு கிடைத்ததே இதற்கு காரணமாகும்.

குறித்த வருடம் 2015ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட போன்களே மேட்படி
பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

குறிப்பிட்ட சில தொடர் IMEI இலக்கங்களில் உள்ள சில போன்களே இவ்வாறு பிரச்சினைக்கு உள்ளதாகவும் MEC குறிப்பிட்டுள்ளது.

உங்களது போன்களை CHECK செய்ய இங்கு செல்லவும்.

பாவனையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க அனைத்து விற்பனையாளர்களும் முகவர்களும் தங்களை அர்ப்பணித்து செயல்பட வேண்டும் எனவும் MEC கேட்டுக்கொண்டது.

வாடிக்கையாளர்கள் தங்களது முறைப்பாடுகளை கீழ்வருமாறு முறையிடலாம்.


Hotline: 16001, 
E-Mail: info@mec.gov.qa, 
Twitter: @MEC_Qatar, Instagram: 
MEC_Qatar, 
MEC mobile app for Android and 10S: MEC_Qatar

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.