சசிகலாவை முதல்வர் சந்தித்த போது கூட சசிகலாவும் இதே கருத்தை தான் வலியுறுத்தியிருக்கிறார். இத்தனை நாள் பொறுத்திருந்தோமே இன்னும் ஒரு நாள் பார்க்கலாம். ஆனாலும், இது மாணவர்கள் பிரச்னை. வெடித்து பூதாகரமாகிவிடும் என்று சசிகலாவும் எச்சரிக்கை தெரிவித்திருந்தாராம்.
போலீசாரும் அன்று இரவு முழுவதும் அமைதியாகவே இருந்துள்ளனர்.
ஆனால், அன்று அதிகாலை எல்லா போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் உயரதிகாரி, மாணவர்களை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்றுங்கள் என்ற உத்தரவு.
எல்லா போலீஸ் அதிகாரிகளுமே இதை ஷாக் நியூசாகத்தான் பார்த்திருக்கிறார்கள். உத்தரவு பிறப்பித்த உயரதிகாரியிடம் சில போலீஸ் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அந்த போலீஸ் உயரதிகாரி, இது மேலிடத்து உத்தரவு என்று பொத்தாம் பொதுவாய் சொன்னாராம்.
யார் அந்த மேலிடம் என்பது தான் தற்போதைய மெரினா மணல் எண்ணிக்கை கேள்வி? முதல்வருக்கு அப்பாற்பட்டு போலீஸ் அதிகாரிகளை இயக்கிய அதிகார மையம் எது?
இதற்கும் மாணவர் படை போராட்டம் நடத்தித்தான் கண்டுபிடிக்க வேண்டுமோ? எல்லாம் சிவனுக்கே வெளிச்சம்..??
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.