எனவே, மெரினாவில் லட்சக்கணக்கான் இளைஞர்களை போராட்டகளத்தில் வைத்துக்கொண்டு குடியரசு தின விழாவை காந்தி சிலை அருகே நடத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. இதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஒருசிலர், 22 ஆம் தேதி பேட்டி அளித்ததில் உளவுத்துறையின் கைங்கரியம் இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. அதற்கு, ஏற்றாற்போல் 23 ஆம் தேதி அதிகாலையில் மெரினாவில் போலீசாரை குவித்து அங்கிருக்கும் இளைஞர்களை அப்புறப்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியே கசிய தொடங்கி இருக்கிறது. எனவே, அதிகாலை 4 மணியளவில் மெரினாவுக்கு வரும் போலீசார் அங்கு போராட்ட களத்தில் உள்ள இளைஞர்களை அமைதியாக கலைந்து செல்ல சொல்ல இருக்கிறார்களாம். அவர்கள் பிடிவாதமாக அங்கேயே இருந்தால் போலீஸ் சற்றே கடுமையாக நடந்து கொள்ளலாம் என்கிறார்கள்.
ஆனால், இதைபற்றியெல்லாம் போராட்டகளத்தில் இருக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பீதியடைய வேண்டாம் நீங்கள் இதுவரை எத்தகைய அறவழியில் இந்த போராட்டத்தை வீறுக்கொண்டு முன்னெடுத்து வந்தீர்களோ அதே அறவழியில் உறுதியாக இருந்தால் இளைஞர்கள் சக்தி இணையில்லா சக்தியாக பரினமிக்கும். இதுநாள் வரை நீங்கள் கடைபிடித்த அமைதி, அறவழி போராட்டத்தை, அந்த மனநிலையை எந்த நொடியிலும் தக்க வைத்திருங்கள். வதந்திகள், ஹேஷ்யங்கள் பரவினாலும் சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகச் செயல்படுங்கள். கூட்டத்தைக் கலைக்கும் கெடுபிடிகளோ, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோ மேற்கொள்ளப்பட்டால், பொறுமையாக ஒத்துழையுங்கள்... அல்லது அமைதி வழியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்க வேண்டாம்... அது மட்டும் முக்கியம்..!
ஏனென்றால், மெரினா முற்றுகை ஒரு வரலாற்று பாடம். அதை தான் நாளைய தலைமுறை படிக்கப்போகிறது. அதில் ஒரு பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் செய்வீர்கள்... அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.