ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக தமிழகமே சோகத்துடன் உள்ளது.
தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், அதனையும் ஏற்காமல் நிரந்தர தீர்வு வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 5 நாட்களாக தமிழகம் எங்கும் இடம்பெற்றுவரும் இந்த எழுச்சி போராட்டத்தில் முதலாவதாக ஒரு உயிர் பிரிந்துள்ளது.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
போராட்டக்களத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் 48 வயதான சந்திரமோகனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதே இடத்திலேய விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது போராட்டக்களத்தில் இருப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் போராட்டம் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.