ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லீம்களை பார்த்து வியர்ந்து நிற்கும் தமிழகம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் தூக்கியெறிந்த இளைஞர்களின் அறப்போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகையே வியக்க வைத்துள்ளது. இந்த போராட்டத்தில் நாளுக்கு நாள் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.



சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் தூக்கியெறிந்த இளைஞர்களின் அறப்போராட்டத்தில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள்  பங்குபற்றி தமது ஆதரவை வெளிக்காட்டி வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்றியுடன் வரவேற்று முஸ்லீம் மக்களுடன் தமது அன்பையும் ஒற்றுமையையும் மேலும் அதிகரித்துள்ளனர்

முஸ்லீம்கள் போராட்ட காரர்களுக்கு உணவு மற்றும் குடி நீர் விநியோகித்ததுவருவதை பார்த்து தமிழகம் இஸ்லாமியர்களின்  அன்பும் ஆதரவும்  எப்போதும் துளியளவேனும் மாறவில்லை என நன்றி பாராட்டுகின்றனர்.




இந்த போராட்டத்தில் இதுவரை எந்த ஒரு பேருந்து கண்ணாடியோ, அரசின் பொதுச் சொத்துக்களுக்கோ இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட களத்தில் ஏற்படும் குப்பைகளை கூட அவர்களே சுத்தம் செய்கின்றனர். போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட இளைஞர்களே சரி செய்து விடுகின்றனர்.

இந்த போராட்டத்தை கண்டு அரசியல் கட்சிகள் வியந்து பார்க்கின்றனர். சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த ஒட்டு மொத்த பேராட்டம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. இதில் சாதி, மதம், மொழி, இனம் என எதற்கும் இடமில்லை.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.