பழைய மொடல் ஸ்மார்ட்போன்களில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது வாட்ஸ் அப் சேவை!

பழைய மொடல் ஸ்மார்ட்போன்களில் இன்றுடன் வாட்ஸ் அப் சேவை வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பை உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில மொடல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 2016 வருடத்தின் கடைசி நாளான இன்றுடன் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படுகிறது.

ஐபோன்களை பொருத்த வரை 2009ல் வந்த 3GS , iOS 4, 4S, 5 மற்றும் 6 ஆகிய இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது. புதிய பதிப்பான iOS 10ல் மட்டுமே இனி வேலை செய்யும்.

அண்ட்ராய்டு போன்களை பொருத்தவரை 2011 காலகட்டத்தில் வெளியான 2.1 மற்றும் 2.2 போன்களில் வாட்ஸ் அப் இனி வேலை செய்யாது. ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பான 7.0 Nougatல் இது வேலை செய்யும்.

விண்டோஸ் போன்களை விடயத்தில் 7 மற்றும் 7.1ல் இன்று இரவுடன் வாட்ஸ் அப் சேவை முடிவுக்கு வருகிறது.

ப்ளாக்பெரி மற்றும் நோக்கியா செல்போன்களை பொருத்த வரை ப்ளாக்பெரி OS, ப்ளாக்பெரி 10, நோக்கியா S40 and நோக்கியா Symbian S60 போன்களில் இன்று வாட்ஸ் அப் சேவை முடிவுக்கு வராது.

காரணம் பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை இந்த வகை போன்களில் வாட்ஸ் அப் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.