30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உரிமைகளுக்காகவும் அவர்களது அபிலாஷைகளுக்காகவும் நடைபெற்ற யுத்ததில் யாராலும் மறக்க முடியாத பட்சத்தில் அக்கால கட்டத்தில் எதிர்நோக்கிய துயரங்களோ எண்ணில் அடங்காதவை அப்படி இருந்தும் 7 வருட காலமாக யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பும் வட,கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்த சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் பலவாறாக அமைகின்றது.
இப்படியான காலகட்டத்தில் திட்டமிட்ட வகையிலான சிங்கள குடியேற்றம், வடகிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி முறைமை, தழிழர் தேசம் அவர்தம் தனித்துவமான இறைமை, சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாக கொண்ட சமஷ்டி தீர்வு. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர்குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறலை துரிதப்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட விதைவைகளுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 2017.02.10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் மக்கள் எழுர்ச்சிப் பேரணியின் மக்கள் சந்திப்பும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கொள்கைப் பரப்பலும் இன்றைய தினம் (30) கொம்மாதுறை, கொடுவாமடு , கெளுத்திமடு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.