தடையுத்தரவு அமலுக்கு வந்த மறுகணமே இந்த நாடுகளை சேர்ந்த பயணிகள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். பல நாடுகளின் விமான நிலையங்களில் பயணிகள் அமெரிக்கா செல்லும் விமானங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமை உள்ள கிறீன் கார்ட் உரிமையாளர்களுக்கும் இந்த தடை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏற்கனேவே விடுமுறைகளில் சென்றிருந்த குறித்த நாடுகளை சேர்ந்த முஸ்லீம் பயணிகள் பலர் அமெரிக்காவுக்குள் வர முடியாமல் உள்ளது. ஜோர்டான் நாட்டில் இருந்து தனது 3 பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசிக்கும் கணவனுடன் ஒன்று சேர சென்ற ஒரு பெண் 3 நாட்களாக உக்ரைன் நாட்டின் விமான நிலையம் ஒன்றில் நிர்கதியாக நிட்கும் காட்சியை அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
சட்டரீதியான அமெரிக்க விசா இருந்தும் அவர் விமானத்தில் மறுக்கப்பட்டார். புற்று நோய் சிகிர்ச்சைக்காக எமிரேட்ஸ் விமானம் மூலம் சிகாகோ நோக்கி சென்ற 76 வயதான ஸஹர் அல்கோநைமி விமான நிலையத்தில் இருந்து அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். சிரியாவின் பிரஜா உரிமை உள்ள அவரது மருத்துவ சிகிர்சை கைவிடப்பட்டதாக இந்த முதிய பெண்ணின் சகோதரி அமெரிக்க செய்தி தாள் ஒன்றுக்கு கூறினார். கடுமையான வலி காரணமாக தற்காலிக சிகிர்ச்சையேனும் வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் அதிகாரிகள் நிராகரித்தனர்.
கூகுள், எப்பல் , உள்ளிட்ட பலவேறு நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தமது ஊழியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அழைத்துள்ளன. ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் ஒன்று இடைக்கால தடை விதித்ததாக கூறப்பட்டபோதும் இலங்கை நேரப்படி திங்கள் அதிகாலை நேரத்திலும் பல முஸ்லீம் பயணிகள் நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.