இதற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் தனது அறிவிப்பு குறித்து டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இது இஸ்லாமியர்கள் மீதான தடை என ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகின்றனர். பெரும்பாலும் இஸ்லாமியர்களே வசிக்கும் 40 நாடுகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை. இதனை மதரீதியாகப் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். 90 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வலுப்படுத்தி, பிறகு தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.