ஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இதர சலுகைகள் நிறுத்த முடிவு !



ஒவ்வொரு பெட்ரோலிய வள வளைகுடா நாடுகளும் தங்களுக்கு தோன்றிய திட்டத்தை பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்த, தற்போதும் ஒமனும் அந்த வரிசையில் வந்துள்ளது ஆனால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பிரச்சனை இது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஒமன் அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதை உடனே நிறுத்துமாறு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 2016 ஆண்டின் போனஸ் நிலவை உட்பட ஹெல்த் இன்ஸூரன்ஸ், மொபைல் போன்கள், வட்டியில்லா லோன்கள், வீட்டுக்கடன்கள், கல்வி உதவித்தொகைகள், இலவச மருத்துவ சோதனைகள், பயண சுகாதார காப்பீடு, மரச்சாமான்களுக்கான சலுகைகள், ரமலான் மற்றும் பெருநாள் சலுகைகள் போன்றவற்றை வழங்குவது அரசின் கட்டாய கடமையல்ல எனவும் கைவிரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான ஓமனின் மொத்த பட்ஜெட் (வரவு செலவு அறிக்கை) 11.7 பில்லியன் ஓமன் ரியால், அரசின் வருமானம் 8.7 பில்லியன் ஒமன் ரியால்கள் மட்டுமே. எனவே, 3 பில்லியன் ஓமன் ரியால் பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளதாலேயே இந்த அதிரடி சலுகை பறிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பற்றாக்குறையை சரிகட்ட சுமார் 2.1 பில்லியன் ரியால்களை சாவ்தேச நாடுகளிடம் (வட்டிக்கு) கடன் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோலிய விலை சரிவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மீட்பதற்காகவும் நாட்டின் நிதி நிலமையை அனுசரித்தும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொருட்டும் ஓமானியர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் நிதி அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலில் தடம்புரண்டது (சலுகை பறிப்பில் சிக்கியது) ரயில் எஞ்சினின் முதல் பெட்டி (அரசுத்துறை) என்றால் அடுத்து புரளப்போவது (தனியார் துறை) எனும் அடுத்த பெட்டியே. உஷார் வெளிநாட்டு மக்களே!

Source: Gulf News

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.