பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம் - வீடியோ இணைப்பு !

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. 



இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத் நகரில் வசிக்கும், ஜவான் குடும்பத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பவரின் குடும்பத்திலுள்ள 11 பேரில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்.

குறித்த ஜவான் பரம்பரையை சேர்ந்த அநேகமானோர் எகொன்றோபிளசியா (Achondroplasia) எனும் நோய் தாக்கத்திற்குட்பட்டுள்ளனர். குறித்த நோயிற்குட்பட்டவர்கள் சாதாரண உடல் பரிமாணத்தை கொண்டிருந்தாலும், கை மற்றும் கால் என்பன குள்ளமானதாக இருக்கும்.

இந்நிலையில் வெளியில் வரும் ராம்ராஜ் குடுபத்தவர்களை, சமூகத்தவர் விசித்திரமாக பார்ப்பதோடு, கேலிக்கைக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளனர், மேலும் குள்ளமாக பிறந்ததன் காரணமாக  சமூகத்தில் தமக்கான அந்தஸ்தோ, தொழிலோ எதுவும் கிடைக்காதநிலையில் மிகவும் கஷ்டத்தை எதிர் நோக்குவதாகவும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ராம்ராஜின் குடும்பத்தில் மொத்தம் 21 பேரில் 18 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். அத்தோடு இவர்களின் குடும்ப வாழ்க்கையை தொடர்வதற்கு வாழ்கை துணையோ, தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு தொழிலோ இல்லாத நிலையில் வாழுகின்றனர்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.