மெல்பேர்ன், Bourke Street கார் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்திருந்த மற்றொரு நபரும் மரணமடைந்துள்ளதையடுத்து, இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
முன்னதாக 10 வயது Thalia Hakin, 22 வயது Jess Mudie, 33 வயது Matthew Si, 25 வயது ஆண் ஒருவர் மற்றும் 3 மாதக்குழந்தை Zachary Bryant ஆகியோர் மரணமடைந்திருந்த நிலையில், Blackburn South-ஐச் சேர்ந்த 33 வயதுப் பெண் ஒருவரே மரணமடைந்த ஆறாவது நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 37 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், இவர்களில் 9 பேர் இன்னமும் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் Bourke Street-இல் குவிந்துள்ள மலர்க்கொத்துகளை அங்கிருந்து அகற்றும் பணி இன்று நடைபெறும் அதேநேரம், அவ்விடத்தில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.