ஜெயலலிதாவின் உயில் பற்றிய விபரம் யாரிடம் உள்ளது என்பது தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவின் ஆடிட்டர் பிரதமரிடம் சரண்டர் ஆகிவிட்டதாக தகவல் காட்டுத் தீ போல் பரவிவருகிறது.
2011 ஆம் ஆண்டே தனது சொத்துகள் முழுமையாக எழுதி முடித்த ஜெ., அந்த ‘நம்பிக்கைக்குரிய பத்திரிகை ஆசிரியர் மூலமாக ஆடிட்டரிடம் கொடுத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீவிரம் அடைந்த நிலையில் உயிலை வெளியிட்டால் மேலும் சிக்கல் வரும் என்று ஜெ., கருதினார். அவர் சசிகலாவை நம்பவே இல்லை என்கிறது பிரபல வார இதழ். ஆனால், சசி டீமிற்கும் தெரியாது ஜெ., உயில் யாரிடம் இருக்கிறது என்பது.
மறைந்த ஆசிரியரும் யாரிடமும் லீக் செய்யவில்லை. ‘அந்த’ ஸ்ரீரங்கத்து ஆடிட்டர் தனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதை அறிந்து பிரதமர் மோடியிடம் தஞ்சம் அடைந்து உயிலை ஒப்படைத்து விட்டார் என்கிறது அந்த பத்திரிகை.
சரி பிரதமரும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்றால் சொத்துக் குவிப்பின் வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வெளிவரலாம். அப்படி வந்த பின் யாருக்கு ஜெ.,வின் சொத்துகள் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய்விடும்.
அதே நேரம் சசிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது அந்தப் பத்திரிக்கை.
சசி டீமிற்கு ஆடிட்டர் சரண்டர் விஷயம் தெரிய வர அலறி விட்டார்கள். எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்று திகிலடைந்து கிடக்கிறது போயஸ்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.