ஆம், இங்கு காளைகள் மூக்கணாங் கயிற்றால் மட்டும் கட்டப்படவில்லை. ஒரு பெரும் அரசியல் சதியால் கட்டப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்துதான் நம் காளைகள் திமிறின என்பதை உணர வேண்டும்.
பால் அரசியல் – 1,700 கோடி டாலர் வணிகம்
உங்களால் உங்களின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டெடுக்க முடிகிறதா…? அப்போது நம் தெருக்களில் காது மடல்களில் பென்சிலை செருகிக்கொண்டு ஒரு பால்காரர் வருவார். அவரிடமிருக்கும் ஐந்து நாட்டு பசுக்களிலிருந்து பாலை கறந்து ஐந்து வீதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகிப்பார்.
அது உண்மையான ஆரோக்கிய காலம். இப்போது அந்த பால்காரர் எங்கே? அவரை தேடுங்கள். அவர் எப்படி ஒழித்துக்கட்டப்பட்டார் என்று ஆராயுங்கள். அதனுடைய விடையில்தான் ஜல்லிக்கட்டு ஏன் தடை செய்யப்பட்டது. உங்களின் வயிறுகளை எப்படி பெருநிறுவனங்கள் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான விடையும் இருக்கிறது.
பாலெனப்படுவது இப்போது உண்மையில் ஓர் ஆரோக்கியபானம் இல்லை என்கிறார் சூழலியலாளர் நக்கீரன். இவர் பால் வணிகத்தை விரிவாக ஆய்வு செய்து பால் அரசியல் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் அவர் பகிர்ந்து இருக்கும் அத்தனை தகவல்களும் உண்மையில் வயிற்றில் பால்வார்ப்பதாக இல்லை. அவர் குறிப்பிடுகிறார்.
“குழந்தைகளுக்கான பால் மற்றும் உணவுக்கான சந்தை மதிப்பு உலகளாவிய அளவில் 1,700 கோடி டாலராகும். இச்சந்தை ஆண்டுக்கு 12 சதவிகித அளவில் வளர்ச்சி அடைந்தும் வருகிறது. தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக்கை கூடினால் இந்நிறுவனங்களுக்கு அது பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தை ஆறு மாதம் தாய்ப்பால் குடிக்கிறது என்றால், அதனால் இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு 450 கோடி டாலராகும்” என்கிறார் அந்தப்புத்தகத்தில்.
இப்பொழுது புரியும் நமக்கு. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னுள்ள மிகப்பெரும் அரசியல் சதி. இந்த சதியை எதிர்த்து மெரினாவில் நடத்திய போராட்டம், அவர்களின் ஆணிவேரை அசைத்துப்பார்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.