பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளைகளாக இருப்பதற்கான 10 சிறந்த வழிகள்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன்னுடைய மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவும் இருக்கும் என்பது தான் இதன் வெளிப்படையான பொருள். அன்னையின் வயிற்றில் சிறு துளியாக உதித்த பொழுதிலிருந்தே, உங்கள் மேல் அவர்கள் பொழிந்த அளவற்ற அன்பையும், பாசத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டியது மகனாகப் பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கருவாக உருவான நாளிலிருந்தே பெற்றோர்கள் உங்களை கவனிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உங்களுக்காக அவர்களுடைய ஓய்வு நேரங்கள், தூக்கம் மற்றும் சுகங்கள் என பலவற்றையும் அவர்கள் தியாகம் செய்திருப்பார்கள்.


சிறந்த மகனாக இருப்பதை அவர்களுக்கு செய்யும் கடமையாகவோ, கடனை திரும்ப அடைக்கும் செயலாகவோ கூட நினைக்க யாருக்கும் அருகதை இல்லை என்பது மிகவும் முக்கியமான விஷமாகும். சிறந்த மகனாக இருப்பது வழக்கம் போல் ஒரு வேலையல்ல, அது ஒரு வாழ்வு முறை. இதன் மூலம் உங்களுடைய குழந்தைகளும் சிறந்தவர்களாக இருக்கும் வகையில் நீங்கள் வழி நடத்த முடியும். ஏனெனில், குழந்தைகள் பெற்றோர்களின் பிரதிகள் தான்.
தன்னலம் பார்க்காமல் அவர்கள் பாசத்தைப் பொழிந்தது போல, நீங்களும் அவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டியது தான் சிறந்த மகனாக இருக்க தொடங்கும் முதல் வழியாகும். உண்மையான அன்பின் மூலம் மரியாதையும், சுயநலமற்ற செயல்களும் வெளிப்படும். பெற்றோர்களுக்கு நீங்கள் தேவைப்படும் நேரத்தில், அவர்கள் அருகில் நீங்கள் இருப்பதை வைத்தே, நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை காட்டி விடும். இதில் நீங்கள் பொருட்களையோ, பணத்தையோ கொடுத்து அடையக் கூடியது எதுவுமில்லை. இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு உங்கள் கையால் ஒரு வேளை சாப்பாடு போட பாசத்துடன் அழைத்துச் செல்வது சிறந்த செயலாக இருக்கும்.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.