வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் குண்டாக இருக்கும் நீங்கள் உடல் எடையை குறைக்கலம்.
வெள்ளரிக்காய் டயட்டை பின்பற்றிய பெண் ஒருவர் 14 நாட்களில் 7 கிலோ எடை குறைத்துள்ளார்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
இந்த டயட்டில் என்னவெல்லாம் சாப்பிடலாம்?
150 கிராம் டூனா மீன்,
2 வேக வைத்த முட்டை, 3 துண்டு கோதுமை பிரட் அல்லது 2 பெரிய வேக வைத்த உருளைக்கிழங்கு.
1/2 கிலோ நற்பதமான பழங்கள்
சர்க்கரை இல்லாத டீ, காபி
சோடா பானங்கள் மற்றும் மதுவை அறவே தொடக்கூடாது.
வெள்ளரிக்காயை எப்படி சேர்ப்பது?
வெள்ளரிக்காய் டயட்டின் போது, நற்பதமான வெள்ளரிக்காய் சாலட் அல்லது வெள்ளரிக்காய் ஷேக் சாப்பிடலாம். முக்கியமாக இந்த டயட்டின் ஸ்பெஷல், இவை இரண்டையும் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.
ஒரு நாளுக்கான வெள்ளரிக்காய் மெனு டயட்
காலை உணவு: 1 கப் வெள்ளரிக்காய் சாலட் மற்றும் 2 வேக வைத்த முட்டை
11 மணியளவில்: 1 பெரிய ஆப்பிள், 1 பீச் அல்லது 5 ப்ளம்ஸ் (200 கிராம்)
மதிய உணவு: கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் 1 பௌல் வெள்ளரிக்காய் சாலட்
4-5 மணியளவில்: வெள்ளரிக்காய் ஷேக் இரவு உணவு: உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பழம் (300 கிராம்)
வெள்ளரிக்காய் டயட் சிம்பிளாக இருந்தாலும், இந்த டயட்டைப் பின்பற்றும் போது தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் 30 நிமிட வேகமான நடைப்பயிற்சி மிகவும் சிறப்பானது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.