உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 பெப்ரவரி மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.5% இனால் அதிகரித்துள்ளதென தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள உற்பத்தி கைத்தொழில் சுட்டெண்
திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் (IIP) பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 பெப்ரவரி மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்தக் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 பெப்ரவரி மற்றும் 2017 பெப்ரவரி மாதங்களில் முறையே 103.9 மற்றும் 103.4 எனப் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் உள்ளடங்கலாக பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகளைத் தயாரித்து வெளியீடு செய்கின்றது. இந்தக் குறிகாட்டிகள் பொருளாதார முன்னேற்றத்தை அடையாளம் காண்பதற்கு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதான துறைகளை அடையாளம் காண்பதற்கு, பொருளாதாரத்தின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதற்கு, கொள்கை வகுப்பாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்கு அரசினைப் போன்று கைத்தொழில் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்கமைவாக தரப்பட்ட காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தின் கைத்தொழில் துறையின் தன்மையினை கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் மூலம் அடையாளம் காணமுடியும்.

2017 பெப்ரவரி மாதத்தின் மாதாந்த உற்பத்திக் கொள்ளளவுடன் ஒப்பிடுகையில் 2018 பெப்ரவரி மாதத்திற்கான 'வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள்', 'மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள்' மற்றும் 'லெதர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள்' என்பனவற்றில் முறையே 30.2%, 20.5% மற்றும் 16.2% என குறிப்பிடக்கூடிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது. 2018 பெப்ரவரி மாதத்திற்கான உணவு உற்பத்தியானது 3.7% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கைத்தொழில் துறையில் உள்ளடங்கும் 'கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள்', 'ஏனைய உற்பத்திகள்' மற்றும் 'கடதாசியும் கடதாசி உற்பத்திகள்' என்பவற்றில் முறையே 36.5%, 27.7% மற்றும் 25.2.% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2018 ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் தொடர்பான மேலதிக விபரங்கள் திணைக்களத்தின் இணையத் தளத்தில் www.statistics.gov.lk பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels:
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.