இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான அமேசான், ஃபெஸ்டிவல் சேல் விற்பனையை இன்று முதல்



புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான அமேசான், தனது மூன்றாவது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. கடந்த வாரத்தில் இரண்டாவது கிரேட் இந்தியன் சேல் விற்பனை நடைபெற்ற நிலையில் இன்று துவங்கியுள்ள விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இதேபோல் ஹெட்போன், பவர் பேங்க் மற்றும் கின்டிள் உள்ளிட்ட சாதனங்களுக்கு அதிகபட்சம் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அவ்வாறு தள்ளுபடி விலையில் கிடைக்கும் முன்னணி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம். 

ஐபோன் 7 (32 ஜிபி):

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 7 உண்மையான விலையில் இருந்து ரூ.11,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 (32 ஜிபி) விலை ரூ.49,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



எல்ஜி ஜி6:

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான எல்ஜி ஜி6 அமேசான் விற்பனையில் ரூ.21,010 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை ரூ.33,990க்கு வாங்கிட முடியும். எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி20:

எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த வி20 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.29,010 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் விற்பனையில் எல்ஜி வி20 விலை ரூ.30,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி ஜி6 போன்றே வி20 ஸ்மார்ட்போனிலும் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 8 ப்ரோ:

அமேசான் தளத்தில் ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.3000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் ஹானர் 8 ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.



ஒன்பிளஸ் 3T:

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் ரூ.25,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ரூ.29,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ.4000 வரை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அமேசான் தளத்தில் 10 சதவிகிதம் வரை கேஷ்பேக், அமேசான் பே மூலம் பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டும் இடம்பிடித்துள்ளது. அமேசான் வழங்கும் முழுமையான சலுகைகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்க முடியும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels:
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.