பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி நீர்; விநியோகம் மற்றும் வடிகானமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சரின் சகோதரர்களும் உடனிருந்தனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் கடந்த 22ஆம் திகதி காலை கொழும்பில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 89.

ஓய்வூபெற்ற அதிபர் என்.எம்.ஏ. ரவூப் அவர்களின் மனைவியான ஹாஜரா உம்மா, வைத்தியர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், ரவூப் ஹசீர், ரவூப் ஹக்கீம், ஹசான் மற்றும் ஹசார் ஆகியோரின் தாயாரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.