பேசமுடியாதவராகவும் உதவியாளராகவும் நடித்தவர்களின் அடி நாக்குகளிலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கட்டிகள்

நாக்கின் அடியில் வைத்து சுமார் 1 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான தங்கக் கட்­டி­களை கடத்திச் செல்ல முயற்­சித்த இருவர்  கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.


சந்தேக நபர்களில் ஒருவர் வாய்பேச இயலாதவர் போன்றும் மற்றையவர் அவருக்கு உதவி புரிபவர் போன்றும் செயற்பட்டதாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் நடத்தை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டமையினால் சோதனை யிட்ட போது சந்தேக நபர்களின் நாக்குக்கு அடியிலிருந்து முழுமை வடிவம் பெறாத தலா  இரண்டு சிறிய தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் சுமார் 180 கிராம் நிறையுடையவை என கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 2.25 மணியளவில் இந்தியாவின், திருவானந்தபுரம் விமான நிலையத்தினை நோக்கி பயணமாகவிருந்த யூ. எல். 1161 என்ற விமான குறித்த தங்கக்கட்டிகளை கடத்தி செல்வதற்கு முயற்சித்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கண்டி மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் சகோதரர்கள என தெரியவந்துள்ளது. அத்துடன்  இவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர்கள் என அவர்களது கடவுச்சீட்கின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.