மு.க.ஸ்டாலின், முதல்வர் பன்னீருக்கு ஆதரவு ? உச்ச கட்ட எரிச்சலில் சசி !

முதலமைச்சர் பன்னீர்செல்வம். ” கடந்த இரண்டு நாட்களாக, பேரவையில் அமைச்சர்களோடு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மோதினாலும்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா தரப்பினர் கொடுக்கும் அழுத்தங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது திமுக.
‘ சசிகலாவைவிட பன்னீர்செல்வம் எவ்வளவோ மேல்’ என்ற அடிப்படையில்தான், அவருக்கு தி.மு.க ஆதரவு கொடுத்து வருகிறது.
ஆட்சிக்கு எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தி.மு.கவிடம் ஓரளவு நெருக்கத்தைக் காண்பிக்கிறார் ஓ.பி.எஸ்.
‘ சபையில் பன்னீர்செல்வம் பலம் பெறுவதற்கு ஸ்டாலின்தான் பிரதான காரணம்’ என எண்ணிக் கொண்டு, ‘ ஜல்லிக்கட்டு கலவரத்தைத் தூண்டிவிட்டதே தி.மு.கதான்’ எனப் பேட்டி அளித்தார் ம.நடராசன்.
” கார்டனின் அரசியல் நடவடிக்கைகளை கவனித்த ஸ்டாலின், தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலரிடம் விரிவாகப் பேசியிருக்கிறார்.
அவர்களிடம் பேசும்போது, ‘ சசிகலாவிடம் அரசியல் செய்வதைவிடவும் பன்னீர்செல்வத்திடம் அரசியல் செய்வது எளிதானது.
ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு, ‘பதவிக்காக அலைகிறோம்’ என மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் உருவாக நாம் காரணமாகிவிடக் கூடாது.
முதலமைச்சருக்கு ஒரு பிரச்னை வரும்போது அவரைக் காப்பாற்றுவதில் தவறில்லை.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் நீங்கள் நெருங்கியே பழகுங்கள். அண்ணா தி.மு.க இன்றைக்கு பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது.
ஜெயலலிதா இருக்கும்வரையில் மத்திய அரசு தன்னுடைய வேலையைக் காட்டவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தைக் காட்டுகிறது.
ஜெயலலிதாவின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடம் போய்விட்டது. அவருடைய முதலமைச்சர் பதவி பன்னீர்செல்வத்திடம் சென்றுவிட்டது.
அரசியலில் விசுவாசமாக இருந்தால் பதவி உயர்வு நிச்சயம் என்பதற்கு பன்னீர்செல்வம் மிகப் பெரிய உதாரணம்.
தீபா பின்னால் தொண்டர்கள் கணிசமாக செல்கின்றனர். சமூக அரசியல் காரணங்களால் சசிகலாவுக்கு எதிரானவர்கள் தீபாவை ஆதரிக்கின்றனர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி நாம் அரசியல் செய்ய வேண்டும். தி.மு.க, அண்ணா தி.மு.க அரசியல் என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போய்விட்டது.
இப்போது அந்த அரசியல் நமக்குத் தேவையில்லை. தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பன்னீர்செல்வம், மத்திய அரசு உள்பட சில சக்திகள் இருக்கின்றன.
இதில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத இடத்தில் சசிகலா இருக்கிறார். மற்றவர்கள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாம் காய் நகர்த்த வேண்டும்.
பழைய பாணி அரசியல் தேவையில்லை. அரசியலின் முழுப் பரிமாணமும் மாறிவிட்டது அரசியல் களத்தில் நமக்கு யார் போட்டி என்பது ஒரு தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்.
அதுவரையில் அரசியலை கவனிப்போம். நாளை சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே நம் பின்னால் வந்தாலும் ஆச்சரியமில்லை.
அ.தி.மு.கவுடன் விரோத அரசியலோ, எதிர்ப்பு அரசியலோ தேவையில்லை’ என விரிவாகப் பேசியிருக்கிறார்.
இவ்வாறு திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் கார்டனில் சசிகலா ஸ்டாலின் மீது உச்ச கட்ட எரிச்சலில் உள்ளாராம்.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.