உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்…யார் இவர்கள்?

உலகத்திலேயே நம்முடைய உங்களுடைய பரம்பரை தான் அழகும் இளமையும் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரமும் பெற்றிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் பொங்கும்?

ஆனால் அப்படி அத்தனை வரங்களையும் மொத்தமாகப் பெற்று, ஆனால் அதில் எந்த பெருமிதமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். அத்தனை வரங்களையும் மொத்தமாக வாங்கி வந்தது குன்ஸா இனம் தான். இவர்கள் இஸ்லாமிய மதத்தைக் கடைபிடிக்கிறார்கள். குன்சா என்பது அங்குள்ள இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிக்கிறது. இந்த இனத்து மக்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள்.
வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் தான் இந்த சாதியினர் வாழ்கின்றனர்.
குறிப்பாக, இவர்கள் அதிகம் வாழும் பகுதியென்றால் புருஸீ குன்ஞ்சவாலி என்னும் பள்ளத்தாக்குப் பகுதியில் தான்.
உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும் அதிக ஆரோக்கியமாக இருப்பதும் இவர்குள் தான்.
இந்த இனத்தில் ஒருவருக்குக்கூட இதுவரையிலும் கேன்சர் வந்ததே கிடையாதாம்.
70 வயதிலும் பெண்கள் இங்கு சாதாரணமாக கர்ப்பம் தரிக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். 90 வயது வரையிலும் மாதவிலக்கு நிற்பதே இல்லை.
இம்மக்கள் புருஸாஷ்கி என்னும் ஒரு வட்டார மொழியைப் பேசுகிறார்கள்.
இவர்கள் தங்களை அலெக்சாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.
நான்காம் நூற்றாண்டில் தான் இவர்கள் இந்த மலைப்பகுதிகளில் குடியேறியிருக்கிறார்கள்.
இந்த இனத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 87 ஆயிரம் மட்டுமே… கல்வியிலும் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
வாழ்க்கை முறை
இவர்கள் வெஜிடேரியன் உணவுகளை மட்மே சாப்பிடுகிறார்கள். நான்- வெஜ்ஜில் முட்டையை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், முட்டை, வால்நட் போன்ற உலர் பழங்கள் ஆகியவற்றை சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.
வால்நட் இவர்களின் பிரதான உணவாக இருக்கிறது. வால்நட்டில் வைட்டமின் பி 17 அதிகமாக இருக்கிறது. அது புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
இவர்கள் வாழும் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையான நாட்கள் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை தான் இருக்கிறது. ஆனாலும் இவர்கள் குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்களாம்.
இவர்கள் மமிககி குறைவாக சாப்பிட்டு, அதிக தூரம் நடைபயிற்சி செய்கிறார்க்ள. ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலும் மிகச் சாதாரணமாக நடைபயிற்சி செய்கிறார்கள்.
வருடத்தில் குறைந்தது 2 – 3 மாதங்களுக்கு எந்த உணவும் இவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. பழச்சாறு மட்டுமே அருந்துகிறார்கள்.
இந்த இனத்தவர்களின் சராசரி ஆயுட்காலம் 120. 70 வயது வரையிலும் மிக இளமையாகத் தெரிகிறார்கள்.
இப்படி ஒரு இனம் இருந்ததே தெரியாமல் இருந்தபோது, 1984 – ஆம் ஆண்டு இந்த இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர் லண்டன் செல்வதற்காக விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருடைய பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டிருக்கிறது. அவர் பார்ப்பதற்கு மிக இளமையாகத் தெரிந்திருக்கிறார். ஆனால் விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் அவருடைய பாஸ்போர்ட்டை பார்த்து, நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போனார்களாம். ஏனென்றால் பார்ப்பதற்கு இளமையாகத் தெரிந்த அவர் பிறந்த ஆண்டு 1832.
இந்த சம்பவம் நடந்தது 1984.
அந்த இளைஞரின் வயது அப்போது 152.
வாயைப் பிளக்காதீர்கள். இது உண்மை.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.