உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மற்றும் எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்பு ; தலவாக்கலையில் சம்பவம் (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

 தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை  தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும், அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



கண்டெடுக்கபட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.