குளித்து கொண்டிருந்தவருக்கு எமனாக மாறிய ஸ்மார்ட்போன்!

பிரான்ஸ் நாட்டில் குளித்து கொண்டிருந்த நபர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் Saumur நகரில் உள்ள ஒரு வீட்டில் 18 வயது இளைஞர் தன் தாயுடன் வசித்து வந்தார். வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக அவர் வழக்கம் போல சென்றுள்ளார்.


அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் குளிக்க ஆரம்பித்த அவர் அருகில் இருந்த சுவிட்ச் போர்டில் தன் ஸ்மார்ட்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கும்போதே அந்த இளைஞர் குளித்து கொண்டிருந்த தொட்டிக்குள் விழுந்திருக்கிறது. இதில் தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் அதில் இருந்த இளைஞர் மீதும் பாய்ந்ததில் அவர் சுயநினைவை இயந்து மயக்கமானார். 

பின்னர் அவர் தாய் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க சிகிச்சை பலனளிக்காமல் இளைஞர் சில தினங்களில் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த கோர சம்பவம் அங்கு வாழும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.