மத்திய அரசின் அனைவருக்கும் வருமானம் திட்டம் - சாத்தியமா?

வறுமையை ஒழிக்கும் வகையில், அனைவருக்கும் குறைந்தபட்சம் வருமானம் கிடைக்கும் வகையிலான, 'பரவலாக்கப்பட்ட அடிப்படை வருமானம் திட்டத்தை செயல்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஆனால், அரசியல் காரணங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குதடையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.




பொருளாதார ஆய்வறிக்கை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில், பரவலாக்கப்பட்ட அடிப்படை வருமான திட்டம் குறித்து கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் தற்போது உள்ள பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மாற்றாக, அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல், வருமானத்தை வழங்கும், யு.பி.ஐ., எனப்படும், 'யுனிவர்சல் பேசிக் இன்கம்' எனப்படும், பரவலாக்கப்பட்ட அடிப்படை வருமான திட்டத்தை செயல்படுத்தலாம்.
ஆனால், இது மற்றொரு திட்டமாக மாறாமல், ஏற்கன வே உள்ள வறுமை ஒழிப்பு, மானிய திட்டங்களுக்கு மாற்றாக இருக்க வேண்டும்.

வறுமையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, மகாத்மா காந்தி, தற்போது இருந்திருந்தால், ஒரு அரசியல் விமர்சகராக, இந்த திட்டத்தை எதிர்க்கலாம், விமர்சிக்கலாம்; ஆனால், இதை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பார்.
மிகச் சிறந்ததாக இருக்கும்.
ரேஷன் மற்றும் உர மானியத்தை தவிர்த்து, மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடக்கும், மிகப் பெரிய ஆறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த ஆய்வில், நாட்டின் எந்தெந்த மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிகவும் அவசியமோ, அங்கு, இதன் செயல்பாடு மிகவும் மோசமாகஉள்ளது. அதனால், அனைத்து நலத் திட்டங்களும், மக்களுக்கு நேரிடையாக செல்வது மிகச் சிறந்ததாக இருக்கும்.

அந்த வகையில், அனைவருக்கும் வருமான திட்டம் மிகச் சிறந்த திட்டம். ஆனால், இதை செயல்படுத்துவதில், அரசியல் ரீதியிலான பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, இரண்டு முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 'ஜாம்' எனப்படும், ஜன்தன் கணக்கு - ஆதார் - மொபைல் இணைப்பு திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு 
மானியங்கள் நேரடியாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்தது, இந்த புதியதிட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவுகளை மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம், வறுமையை, 0.5 சதவீதம் குறைக்க முடியும். மக்கள் தொகையில், அதிக வருவாய் ஈட்டும், 25 சதவீத மக்களைத் தவிர, மற்றவர்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 முதல், 5 சதவீதம் வரை செலவாகும்.
ஏற்கனவேஉள்ள மானிய திட்டங்களுக்கான செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், 3 சதவீதமாக உள்ளது.அதனால், இந்த அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் மிகவும் சிறப்பான திட்டம். இதை நடைமுறை படுத்துவது குறித்து, விவாதித்து, கலந்தாலோசித்து, படிப்படியாக நிறைவேற்றலாம்.இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக தோல் தொழிலுக்கு சாதகமா?
அதிகரித்து வரும் சம்பளம் உள்ளிட்டவற்றால், சீனாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி சரிந்துள்ள நிலையில், இந்தத் துறையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பது குறித்தும், பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தோல் பொருட்கள், தோல் ஆடைகள் ஏற்றுமதி, சர்வதேச அளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தத் துறையில், அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
பருத்தி துணிகளுக்கான ஏற்றுமதிக்கு, 6 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது; ஆனால், தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தோல் துணிகள் ஏற்றுமதி செய்யும் பல்வேறு நாடுகளில், மிகவும் குறைவான வரியே வசூலிக்கப்படுகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல், தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மானியங்கள் ரத்தாகும்
ஏழை, பணக்காரர், வேலையில் உள்ளோர், வேலைவாய்ப்பு இல்லாதோர் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், எந்த நிபந்தனையும் இல்லாமல், அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தொகையைஅளிப்பதுதான், அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் திட்டத்தின் முக்கிய அம்சம். அதாவது, ஒருவருடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தத் தொகை வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், சமையல், 'காஸ்' மானியம், ரேஷன் கடைகள் உட்பட அனைத்து மானியங்கள் மற்றும் சமூக நல திட்டங்களும் விலக்கி கொள்ளப்படும்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில், அதிபராக இருந்த, லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா ஆட்சியின்போது, இதுபோன்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை, 27.7 சதவீதம் குறைந்தது.
நம் நாட்டில், யுனிசெப் மற்றும் சுயவேலைவாய்ப்பு பெண்கள் சங்கம் இணைந்து, மத்திய பிரதேசத்தில் இதற்கான திட்டத்தை சோதனை அடிப்படையில் மேற்கொண்டன.
அங்கு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, 12 ஆயிரம் பேருக்கு இது போன்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டு, மிகச் சிறப்பான பலனை அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்து, அமெரிக்காவின் டென்வர், சியாட்டில் பகுதிகள், மற்றொரு ஐரோப்பிய நாடானநெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில், இதுபோன்ற ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
செல்லாத நோட்டால் பாதிப்பு
''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பல்வேறு துறைகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டன; ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு அது பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளது,''
என, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார்.பொருளாதார அறிக்கையை தொகுத்துள்ள, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இது குறித்து கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், தற்காலிகமாக, சில கஷ்டங்கள், இழப்புகள், செலவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், பல்வேறு நன்மைகளும் கிடைத்துள்ளன. வங்கிகளில், 'டிபாசிட்' அதிகரித்துள்ளதால், கடன் வழங்குவது அதிகரித்துள்ளது,
கடனுக்கான வட்டி குறைந்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டால், சில துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானது தான். விரைவில், பணத் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கி, பொருளாதாரம் வேகமெடுக்கும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை கட்டாயமாக்க விரும்பவில்லை. சரியான வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய மக்களும், டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கு, பல்வேறு சலுகைகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.