18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியர் ஆன இளைஞன் !

மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ 18 வயதில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரிய ராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்! ஹாங்காங்கில் பிறந்த மார்ச் டியான், 2007-ம் ஆண்டு உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். 9 வயதில் கணிதத்தில் A, புள்ளியியலில் B நிலைகளைக் கடந்து General Certificate of Education படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். 

சாதாரண மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுத் தேர்வுகளையே எழுதுவார்கள். அதே ஆண்டு ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 4 ஆண்டுகளில் முதுகலை படிப்புடன் வெளியே வந்தார். அமெரிக்கா சென்ற மார்ச், சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையைப் பெற்றிருக்கிறார். மார்ச்சின் ரத்தத்திலேயே மேதமை கலந்திருக்கிறது. இவரது அண்ணன் ஹொராசியோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 14 வயதில் நுழைந்தார்! இவரது அப்பா ஆரம்பக் கல்வி பயிலும் வயதிலேயே உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார்! “என்னை மேதை என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. 

நான் எந்தக் கஷ்டமும்படாமல் இயல்பாகவே படித்து முடித்திருக்கிறேன். என் பெற்றோரும் ஆசிரியர்களும் என் குழந்தைத் பருவத்தைச் சிதைத்து, மேதையாக்கியிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். என் குழந்தைப் பருவம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

எனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கினாலும் நான் இதே பாதையில்தான் பயணிப்பேன்” என்கிறார் மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.