இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., தொண்டர்கள் ஆடம்பர பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலையின் இரு புறமும் தி.மு.க., தொண்டர்கள் என்னை வரவேற்று பேனர்கள் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பேனர்களை கண்டு பொது மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதை எச்சரிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.
சாலையின் இரு புரத்திலும், சாலையின் நடுவிலும் பேனர் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். என்ன நிகழ்ச்சி நடக்கிறது எங்கு நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க ஒரு இடத்தில் மட்டும் வைக்கலாம். அதுவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வைக்க வேண்டும். பேனர்களில், பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, அன்பழகன் படங்கள் மட்டும் இருந்தால் போதும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பேனருக்கு பதில், தி.மு.க.,வின் கொடிகள் ஓங்கி பறப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.