மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளாதவர்களை விட அந்த இறைச்சியை உட் கொள்பவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய அந்த ஆய்வில், உயர்-வெப்பநிலையில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளும் போது புற்றுண்டாக்கக்கூடிய அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள், பாலிசைக்ளிக் மற்றும் பிற இரசாயனங்கள் உடலில் அதிகமாகிறது. இதனால் புற்று செல்கள் மேலும் அதிகரித்து உயிரை பறிக்கும் நிலை உண்டாகிறது என தெரியவந்துள்ளது.
வாட்டிய இறைச்சி சாப்பிட்ட 1500 பெண்களில் அடிக்கடி இறைச்சியை உண்ட 39.7 சதவித பெண்கள் இறந்ததாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.