அமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் !

அமெரிக்கா, ஹாலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தவர் லிண்ட்சே லோகன் அவர்கள் துருக்கிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள பேட்டியை தொடர்ந்து அவர் இஸ்லாத்தை தழுவி விட்டாரா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.



கடந்த வருடம் குர்ஆன் பிரதி ஒன்றை லிண்ட்சே லோகன் அவர்கள் நெஞ்சோடு அனைத்தபடி இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து சக அமெரிக்கர்களால் அன்னியரை போல் நடத்தப்பட்டு மனம் வெறுத்து அமெரிக்காவை விட்டே வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

தன்னுடைய சவுதி நண்பர் ஒருவர் திருக்குர்அன் ஒன்றை பரிசளித்ததை தொடர்ந்து வாசிக்கத் துவங்கியது முதல் தனக்கு ஆன்மீக அனுபவத்தையும் வாழ்வின் உண்மையான அர்த்தத்தையும் கண்டுகொள்ள துவங்கியதாகவும், 'என்னை நான் யார்' என உணர்ந்த கொள்ள உதவியதாகவும், மன அமைதியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து பழைய பதிவுகள் அனைத்தையும் சுத்தமாக நீக்கிவிட்டு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற முகமனை பதிவேற்றி வைத்துள்ளார். நான் என்னுடைய விருப்பப்படி குர்ஆனை படிப்பதற்கு எனக்கு உரிமையில்லையா? என தன்னை தூற்றிய அமெரிக்க மக்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதே அமெரிக்கர்கள் 'அவர் நடிகையாக இருந்தபொழுது வாழ்ந்த இந்த அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கையை வரவேற்றவர்கள்'

முன்பு, லிண்ட்சே லோகன் அவர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் வாழும் அகதிகளுக்காக மனிதாபிமான உதவிகளை மனமுவந்து செய்ததற்காகவும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சகோதரி லிண்ட்சே லோகன் அவர்களுக்கு நேர்வழி கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.