வீதிக்கு வருகின்றது யானைகள்..! சாரதிகளே அவதானம்!

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யானைக்கூட்டம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பிரதான வீதிகள் ஊடாக நேரகாலம் இன்றி திடீர் திடீரென கடக்க முயற்சிப்பதாக அறியப்படுகின்றது.
இதேவேளை துணுக்காய், அக்கராஜன் பிரதான வீதி மற்றும் ஸ்கந்தபுரம், கிளிநொச்சி பிரதான வீதிகள் ஊடாகவும் கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பிரதான வீதிகளில் யானைகள் கடக்கும் பிரதேசம் அவதானம் என அறிவிப்பு பலகை நாட்டப்பட்டுள்ளது.
எனினும் குறித்த யானைக் கூட்டம் தற்பொழுது அறிவித்தல் பலகை நாட்டப்படாத இடங்கள் ஊடாகவும் கடக்க முற்படுகின்றன.
அதனால் வேகக் கட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு விழிப்புடன் தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட போக்கு வரத்து பொலிஸ் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.