அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைப்பதாக இருந்தது.
ஆனால், ஓ.பி.எஸ்., வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.
இந்த கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாமல் தடைகள் போடப்பட்டுள்ளது.
முதல்வர் ஏமாற்றம்: இந்நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
இருப்பினும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
எவ்வித சுமுக முடிவும் ஏற்படவில்லை. இதனையடுத்து மதுரையில் இருந்து முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னை திரும்பவுள்ளார். இன்று காலை 11. 30 மணியளவில் அவர் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.
தொடர்ந்து கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் அலங்காநல்லூருக்கு கிளம்பி சென்றனர். இரண்டாவது கட்ட பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நிரந்தர சட்டம் என்பதுதான் நிரந்தர தீா்வு என்பதை இளைஞா்களின் தொடா் போராட்டத்தில் உணா்ந்து விட்டார் முதல்வா் பன்னீா்.
அவரச ஆலோசனைக்கு சென்னைக்கு திரும்புகிறார். இளைஞா்கள் போராட்டம் நிரந்தர சட்டத்தை நோக்கி நெருங்கி வருகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.