முகப்புத்தகம் பயன்படுத்த கட்டார் நாட்டில் கடும் சட்டம் மீறினால் கடும் சட்ட நடவடிக்கை !

கத்தார் FACEBOOK பயன்படுத்துவது தொடா்பாக புதிய சட்டங்களை விதித்தது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கை!



முகப்புத்தக பாவனை தொடர்பான புதிய சட்ட விதிகளை கட்டார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

முகப்புத்தகத்தில் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் கட்டார் அரசு பட்டியலிட்டுள்ளது,
அவை வருமாறு….

உங்கள் முகப்புத்தகத்திற்கான பாஸ்வேர்ட் யாருடனும் பகிரக்கூடாது. அதேநேரம் போலியான முகப்புத்தக கணக்குகளையும் பக்கங்களையும் உருவாக்கி பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு

அறிவித்துள்ளது.
மோசமான புகைப்படங்கள், மதுபானம் அருந்துவது போன்ற புகைப்படங்களை முகப்புத்தகங்களில் பதிவேற்றம் செய்வது தடை செய்யபபட்டுள்ளது. முஸ்லிம் அல்லாதவர்கள் மதுபானம் அருந்துவதற்கு அனுமதியுள்ள போதிலும் அவற்றை புகைப்படமாக எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்வது இஸ்லாமிய கலாசார விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்படுகிறது.

இஸ்லாம் சமயம் தொடர்பான கேலியான கருத்துக்களை வௌியிடக்கூடாது.

சுகவீனமுற்றவர்கள், விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் விபத்துக்கள் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய புகைப்படங்கள் எடுப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அறிந்திருத்தல் வேண்டும். எனினும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வது கட்டார் சட்டப்படி தவறானதாகும்.

பிறரை அச்சுருத்தும் வகையிலான எச்சரிக்கைகள் , கருத்துக்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான அச்சுருத்தல் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறான செய்திகள், போலியான சம்பவங்கள் மற்றும் வதந்திகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை பதிவேற்றம் செய்யதல் கூடாது. ஒருவர் சம்பவப்பட்ட புகைப்படங்களை அதவாது அவர் விழுவது, கோமாளித்தனமாக ஏதும் செய்வது தொடர்பான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்கள் அனுமதியின்றி அவர்களுக்கு டேக் செய்வது சட்டப்படி குற்றம்.

மேற்குறித்தசட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


மூலம்- வெல்கம் கட்டார்
தமிழில் வேலைத்தளம்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.